☎ தமிழ் ஜோதிட சேவை 📅 14 November 2026

27 நட்சத்திர திருமணப் பொருத்தம்

உங்கள் நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் பொருந்தும்? — 10 பொருத்தங்களின்படி கணக்கிடப்பட்ட பட்டியல்

நட்சத்திரப் பொருத்தத்தை எப்படிப் படிப்பது?

திருமணப் பொருத்தத்தின் முதல் படி, ஆணின் நட்சத்திரமும் பெண்ணின் நட்சத்திரமும் 10 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகின்றன என்று பார்ப்பது: தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசியாதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை. இவற்றில் ரஜ்ஜுவும் வேதையும் மிக முக்கியம்; இவை பொருந்தாவிட்டால் மற்றவை நன்றாக இருந்தாலும் பாரம்பரியம் அந்த இணைப்பை ஏற்பதில்லை.

கீழே உள்ள ஒவ்வொரு நட்சத்திரப் பக்கத்திலும், அந்த நட்சத்திரம் ஆணாக இருந்தால் 27 பெண் நட்சத்திரங்களுடனும், பெண்ணாக இருந்தால் 27 ஆண் நட்சத்திரங்களுடனும் கணக்கிடப்பட்ட முடிவு, எந்தெந்தப் பொருத்தங்கள் பொருந்தவில்லை, எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பவை உள்ளன. நட்சத்திரம் மட்டும் இறுதி முடிவு அல்ல; பாதம், ராசி, செவ்வாய் தோஷம், தசா சந்தி ஆகியவற்றையும் சேர்த்துப் பார்க்க ஜாதகப் பொருத்தம் பயன்படுத்துங்கள்.